விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
புளியரையில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளருக்கு எதிரான மத்திய அரசின் நாசகர கொள்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளருக்கு எதிரான மத்திய மோடி அரசின் நாசகர கொள்கைகளை கண்டித்து தென்காசி மாவட்டம் புளியரையில் நேற்று விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய சங்க தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட் டத்தை விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் பி. வேலுமயில் துவக்க வைத்து பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் என். பால்ராஜ் முடித்து வைத்து பேசினார். போராட்டத்தில் விவசாய சங்கம் சார்பில் முத்துசாமி, செய்துமசூது, ராஜ கோபால், சண்முகவேல், நல்லையா ஆகியோரும் விவசாய தொழிலாளர் சங்க சார்பில் முருகேசன், பாக்கியலட்சுமி, கிருஷ்ணன் மற்றும் தொழிற்சங்கம் சார்பில் முகமது காசீம், மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story