திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளா்கள் சங்கம் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் செய்தனர்
திருவண்ணாமலை புறவழிச் சாலையின் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொ.மு.ச., மாநில துணை செயலாளர் சௌந்தரராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச., -சி.ஐ.டி.யு., -ஏ.ஐ.டி.யு.சி., -ஐ.என்.டி.யு.சி., உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

மேலும் விவசாய விளைப்பொருட்களுக்கு 1.5 விலை சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ திரும்பப் பெற வேண்டும். ஊரக வேலைத் திட்டத்தில் 200 நாட்கள் பணி வழங்க வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆக உயா்த்த வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் திட்டத்தை விரிவுப்படுத்த கோரியும், மின்சார திருத்த மசோதா திரும்ப பெற கோரியும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், விதை உரம் மின்சாரத்திற்கான மானியத்தை உடனடியாக அதிகரித்திட வேண்டும், விரிவான கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆகியவற்றின் மாவட்ட நிா்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story