சிங்கப்புணரி பகுதியில் விவசாயம் பா

சிங்கப்புணரி பகுதியில் விவசாயம் பா

விளைச்சல் பாதிப்பு

சிங்கப்புணரியில் பருவம் தவறி பெய்த மழையின் சிங்கம்புணரி பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது.

சிங்கம்புணரி பகுதியில் பருவம் தவறி பெய்த மழை மற்றும் காலம் தவறி செய்யப்பட்ட சாகுபடியால் நெல் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது.

இந்தாண்டு விவசாயப் பணிகள் துவங்கும் நேரத்தில் போதிய மழை பெய்யாததாலும், பிறகு காலம் கடந்து பெய்த மழையாலும் விவசாயிகள் பலர் நெல் சாகுபடி செய்யவில்லை. போர்வெல் தண்ணீரை கொண்டு ஒரு சிலர் மட்டும் நடவு மற்றும் நேரடி விதைப்பு மூலம் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

கடுமையான போராட்டத்திற்கு பிறகு நெல் ஓரளவு விளைச்சல் கண்டுள்ளது. தற்போது அந்த வயல்களில் அறுவடைப் பணிகள் துவங்கியுள்ள நிலையில் வழக்கமாக கிடைக்கும் நெல்லை விட பாதி அளவு மட்டுமே கிடைத்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். சராசரியாக ஏக்கருக்கு 35 முதல் 40 மூடை வரை இப்பகுதியில் கிடைத்த நிலையில் தற்போது 20 மூடைக்கும் குறைவாகவே விளைச்சல் நெல் கிடைத்துள்ளது. இது உழவுக் கூலி உள்ளிட்ட செலவினங்களுக்கு கூட கட்டுப்படியாகவில்லை என்கிறார்கள் விவசாயிகள்.

பருவம் தவறி மழை பெய்து தட்பவெப்ப நிலை அடிக்கடி மாறியதால் விளைச்சல் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

Tags

Next Story