ஈரோட்டில் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக் கண்காட்சி

ஈரோட்டில் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக் கண்காட்சி


ஈரோட்டில் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக் கண்காட்சி


யுனைட்டட் டிரேட் ஃபேர்ஸ் இந்தியா வழங்கும் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி பிப்ரவரி 9 - 11 தேதிகளில் ஈரோடு பரிமளம் மஹாலில் நடைபெறுகிறது

தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான விவசாயம் மற்றும் பால் உற்பத்திக் கண்காட்சி ஏழாவது வருடமாக ஈரோட்டில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. யுனைட்டட் டிரேட் ஃபேர்ஸ் இந்தியா வழங்கும் இந்த விவசாயம் மற்றும் பால் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி பிப்ரவரி 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் உள்ள பரிமளம் மஹாலில் நடைபெறுகிறது

இந்தகண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருக்கும் விவசாய மக்களைச் சென்று சேர்ந்து , தற்போது சந்தையில் இருக்கும் நவீன வேளாண் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்த முடியும் என்பதை தெரிவிப்பதே இக்கண்காட்சியின் நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கடைகளில் தொழில்நுட்ப அறைகள்,பவர் டில்லர்ஸ் ,சோலார் மோட்டார்கள், பம்புகள், பைப்கள், சொட்டுநீர்ப்பாசன அமைப்பு, அறுவடை எந்திரம் உட்பட பல வேளாண்மை சார்ந்த தொழிற்நுட்ப சாதனங்கள் இடம்பெறுகின்றன. இயற்கை உரம்,மைனர் சிறு தாணிய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் புத்தகங்கள் போன்ற தொழில்நுட்பமல்லாத பொருட்களும் இங்கு கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன . இவையனைத்தும் விற்பனைக்குக் கிடைக்கும்.

Tags

Next Story