வேளாண்மை,தொழில்துறை படு பாதாளத்துக்கு சென்று விட்டது: எடப்பாடி பழனிசாமி

வேளாண்மை,தொழில்துறை படு பாதாளத்துக்கு சென்று விட்டது: எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தமாற்றுக்கட்சியினர்


வேளாண்மை,தொழில்துறை படு பாதாளத்துக்கு சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொங்கு இளைஞர் பேரவையின் சேலம் மாவட்ட செயலாளர் ரமேஷ், சேலம் மாநகர செயலாளர் மணி, திருப்பூர் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவாஜிராஜா, கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் சம்பத், நாமக்கல் மாவட்ட இணை செயலாளர் காந்திசெல்வன், விருதுநகர் மாவட்ட செயலாளர் ராமசாமி, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் சத்யராஜ் உள்பட அக்கட்சியிலிருந்து விலகிய 500க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, கரூர் மாவட்ட அவைத் தலைவர் திருவிக, மாவட்ட துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் மாரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை: அதிமுகவுடன் இணைந்து வெற்றி பெற்ற கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு அந்த சமுதாயத்தினருக்கு எதுவும் செய்யவில்லை.

நான் கிளைக் கழகத்தில் கட்சியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தவன் சட்டமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் இப்போது பொதுச் செயலாளராக இங்கு வந்துள்ளவர்கள் பெரும்பாலானோர் வேளாண் தொழிலை கொண்டவர்கள் வேளாண் தொழில் கடினமான இரவுப் பகல் பாராமல் ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கின்றனர் அதிமுக எப்படி இருந்ததோ அதேபோன்று வேளாண் பெருமக்களும் யாருக்கும் அடிமையாக இருந்தது கிடையாது.

வேளாண்மை மற்றும் தொழில் துறை இரண்டும் திமுக ஆட்சியில் படு பாதாளத்துக்கு சென்று மின்சார கட்டணம் கடுமையாக உயர்ந்து விட்டது விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் நட்டத்திற்கு தள்ளப்பட்டு விசைத்தறியை எடைக்கு போடும் நிலை வந்து அதிமுகவில் வேளாண் தொழில் செழிக்க தலைவாசலில் கால்நடை பூங்கா பிரம்மாண்டமான முறையில் தரப்பட்டது பால் உற்பத்தியில் தமிழகத்திலேயே சேலம் அதிகமாக உள்ளது தலைவாசலில் பிரமாண்டமான கால்நடைப்பு தந்தும் இந்த ஆட்சியாளர்கள் அதை கிடப்பில் போட்டுவிட்டனர்.

நான் வெளிநாடு சென்று இருந்த போது அங்குள்ள தொழில்நுட்பத்தை தமிழகத்தில் புகுத்த வேண்டும் என்பதற்காக கலப்பின பசுக்களை உருவாக்குவதற்காக கால்நடை பூங்கா தந்தோம் விவசாயிகளுக்கு தேவையான கன்று ஈனுவதற்கான வசதிகள் ஆராய்ச்சி நிலையம் தந்தோம். உங்கள் எதிர்காலம் சிறக்கும்.

Tags

Next Story