பயறு மகசூல் குறித்து வேளாண்மை துறை வழிகாட்டுதல்
பயறு ஒன்டர் விநியோகம்
பாபநாசம் வட்டார விவசாயிகளுக்கு பயறு ஒன்டர் விநியோகம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் பாபநாசம் வேளாண்மை வட்டார இயக்குனர் மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது பாபநாசம் வட்டாரத்தில் கோடை உளுந்து 250 எக்டருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து பயிர் பூக்கும் பருவத்தில் 30ஆம் நாள் மற்றும் 50-வது நாள் டிஏபி இலைவழி உரம் பூக்களை அதிகப்படுத்துவதற்காக தெளிக்கப்படுகிறது டிஏபி உரத்திற்கு மாற்றாக வேளாண்மை துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் பயிறு ஒன்டர் வழங்கப்படுகிறது இது பூக்கள் உதிர்வதை தடுக்கும் பூக்கும் திறனை அதிகரிக்கின்றது.
பயறு ஒன்டர் தெளிப்பதன் மூலம் 20% மகசூல் அதிகரிக்கின்றது வறட்சியை தாங்கி பயிர் வளரும் மேலும் இதன் மூலம் பேரூட்ட சத்துக்கள் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் பயிருக்கு கிடைக்கிறது ஏக்கருக்கு 20 கிலோ பயறு ஒன்டரை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசல் தயாரித்து டேங்கிற்கு 1 லிட்டர் பயறு ஒன்டர் கரைசலுடன்9 லிட்டர் தண்ணீர் கலந்து மாவுக்கு 7 டேங்க் என்ற அளவில் தெளிக்க வேண்டும் காலை மற்றும் மாலை வேலைகளில் இலை துளைகள் திறப்பதினால் அந்த நேரத்தில் பயறு ஒன்டர் தெளிப்பதினால் நன்கு கிரகிக்கப்பட்டு 4 மணி நேரத்தில் கரும் பச்சை நிறத்தில் மாறி ஒளிச்செயற்கை அதிகப்படுத்தப்படுகிறது.
இதனால் பயிர்கள் வேர்கள் மூலம் உறிஞ்சும் சத்துக்கள் அதிகரித்து வேர் முடிச்சுகள் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன அதன் விளைவாக பூக்களின் எண்ணிக்கை அதிகரித்து தேவையான நுண்ணூட்ட சத்துக்கள் கிடைப்பதினால் பூக்கள் கொட்டாமல் அனைத்தும் காய்களாக மாறும் இதனால் ஏக்கருக்கு 100லிருந்து 150 கிலோ மகசூல் அதிகமாக கிடைக்கும் இந்த பயறு ஒன்டர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண்மை துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது இவர் அதில் கூறப்பட்டுள்ளது மேலும் பாபநாசம் வட்டாரத்தில் 10 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிர் ஒன்டர் வளர்ச்சி ஊக்கியை பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் வழங்கினார் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ரஞ்சனி ஆகியோர் உடன் இருந்தனர்.