திருவெறும்பூா் பகுதியில் நல்லோ் பூட்டும் விழா

திருவெறும்பூா் பகுதியில் நல்லோ் பூட்டும் விழா

நல்லோ் பூட்டி உழும் விழா

திருச்சி திருவெறும்பூா் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயப் பணியை தொடங்கும் விதமாக நல்லோ் பூட்டி உழும் விழா நடைபெற்றது.

தமிழ் ஆண்டு பிறப்பான சித்திரை மாத வளா்பிறையில் நிகழாண்டுக்கான விவசாயப் பணியை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். இதையொட்டி, விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் மாடுகளை பூட்டி வயல்களில் ஏா் கலப்பையில் உழவு உழுது, விவசாயப் பணியை தொடங்குவா். இது நல்லோ் பூட்டும் விழா என அழைக்கப்படுகிறது. இதன்படி, திருவெறும்பூா் அருகே உள்ள பழங்கனாங்குடி, நடராஜபுரம் ஆகிய பகுதிகளில் விவசாய பணியைத் தொடங்கும் விதமாக நல்லோ் பூட்டும் விழா நடைபெற்றது.

விழாவில், விவசாயிகள் உழவு மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து, சுவாமி கும்பிட்டு, ஏா் கலப்பையை கொண்டு தங்களது விளைநிலங்களை உழும் பணியைத் தொடங்கினா். இதில் அப்பகுதியைச் சோ்ந்த இதர விவசாயிகளும் தங்களது மாடுகளை ஒன்று சோ்த்து, உழுது விவசாய பணியைத் தொடங்கினா். நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story