திருவாலங்காடில் சேதமடைந்த வேளாண்மை அலுவலகம்

திருவாலங்காடில் சேதமடைந்த வேளாண்மை அலுவலகம்

திருவாலங்காடிலுள்ள வேளாண்மை அலுவலகம் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.


திருவாலங்காடிலுள்ள வேளாண்மை அலுவலகம் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
திருவாலங்காடில் வட்டார வேளாண் அலுவலக கட்டடம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கட்டடத்தில், வட்டார வேளாண் விரிவாக்க மையம், வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முறையாக பராமரிப்பு செய்யாததால், கட்டடம் எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தின் கூரை சேதமடைந்து உள்ளதால் சிறிய மழைக்கே நீர் ஒழுகுவதும், கூரையின் சிமென்ட் பூச்சு உதிர்வதும் வாடிக்கையாகி உள்ளது. மேலும், இடுபொருட்கள், பதிவேடுகள் பாதுகாப்பாக வைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. சிறிய கட்டடமாக உள்ளதால் வேளாண் அலுவலர்கள், இடநெருக்கடியில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நான்கு ஆண்டு களுக்கு மேலாக பழுதடைந்து கிடக்கும் வேளாண் அலுவலக கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட, நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். விவசாயத்துக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வேளாண் கட்டடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story