விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வேளாண் அலுவலர் முக்கிய அறிவிப்பு
விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற வேளாண் அலுவலர் முக்கிய அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட வேளாண்மை அலுவலர் சூர்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது,நமது பாரம்பரிய உணவுகளில் மிக முக்கியமானவை சிறுதானி யங்கள். சோளம், கம்பு, ராகி, தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரை வாலி மற்றும் குலசாமை போன்றவை முக்கிய சிறுதானியங்கள் ஆகும். இவை நம் முன்னோர்களால் பாரம்பரியமாக பயன் படுத்தப்பட்டு வந்தவை. சமீப காலங்களில், சிறுதானியங்களின் சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வு மீண்டும் ஏற்பட்டு வருகிறது. சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐநா சபை, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்திருந்தது. சிறு தானியங்களில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. மனிதர்களை பாதிக்கும் பல நோய்களிலி ருந்து பாதுகாக்கும் ஆற்றல் கொண்டவை.
அவற்றின் முக்கியத்து வத்தினை உணர்ந்து, சமீபகாலமாக நுகர்வோர் சிறுதானிய உணவுகளின் மீது ஆர்வத்தை வளர்த்து வருகின்றனர். தற்போது சந்தைகளில் பல மதிப்பு கூட்டப்பட்ட சிறுதா னியங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றில் சில மதிப்பு கூட்டப் பட்ட பொருட்களான கஞ்சி, இட்லி, தோசை, ரொட்டி, சப்பாத்தி, உப் புமா, பொங்கல், கிச்சடி,பன்னியாரம், அடை, வர மிளகாய், அல்வா, கேசரி, அதிரசம், கீர், ஸ்வீட் பால், கொழுக்கட்டை, பக்கோடா, ஓமப்பொடி, முறுக்கு, தட்டு வடை, குக்கீகள், கேக் போன்றவை தயாரித்து விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதற்கு தேவையான பயிற்சிகளை ஐதராபாத் தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. எனவே, இதனை பயன்படுத்தி விவ சாயிகள், உழவர் ஆர்வலர் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிறுதானியங்கள் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தி யும், அதனை மதிப்பு கூட் டுதல்மூலம் வருமானத்தை அதிகப்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.