கோடை உழவு செய்து அதிக மகசூல் பெற வேளாண் அதிகாரி தகவல்

பாலக்கோடு சுற்று வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்து அதிக மகசூல் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் கூறியுள்ளார்.
இது குறித்து பாலக்கோடு வட்டார வேளாண்மை இயக்குனர் அருள்மணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,கோடை உழவு செய் வதனால் மண் இறுக்கம் நீக்கப்படுவதோடு, மண்ணின் நீர் பிடிப்பு திறனும் அதிகரிக்கிறது. மேலும் பயிரின் மகசூலும் 20 சதம் அதிகரிக் கும். கோடை உழவினை சரிவுக்கு குறுக்காக உழ வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண் டும். இதனால் கோரை போன்ற கிழங்கு வகைகளை கட்டுப்படுத்தப் படுகின்றன. நிலத்தில் உள்ள பூச்சிகளின் முட் டைகள், கூண்டு புழுக்கள் மற்றும் களை செடிகளின் விதைகள் நிலத்தின் அடிப்பகுதியிலிருந்து, மேல் புறத்திற்கு கொண்டு வரப்படுவதால், அதிக வெப்பநிலை காரணமாக அழிக்கப்படுகின்றன.இதன் மூலம் சாகுபடி செய்யப்படும் அடுத்த பயிரில், பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக காணப்படும். மண்ணை புரட்டிவிடும் பொழுது முதலில் மண் வெப்பம் ஆகி பிறகு குளுமை அடை யும். பெய்யும் மழை நீரானது, நன்கு நிலத்தில் ஊடுருவி நிலத்தின் அடிபகுதிக்கு சென்று அடிப்பகுதியில் தங்கும் இதன் மூலம் நிலத்தின் ஈரப்பதம் காக்கப்ப டுகிறது. எனவே, விவ சாயிகள் அனைவரும் மழையினை பயன்ப டுத்தி, கோடை உழவு. செய்து கூடுதல் மகசூல் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவி த்துள்ளார்.

Tags

Next Story