விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய வேளாண்துறை அதிகாரிகள்

விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய வேளாண்துறை அதிகாரிகள்

சிவகங்கை அருகே விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கிய வேளாண்துறை அதிகாரிகள்

சிவகங்கை அருகே நெல் சாகுபடியில் அதிக லாபம் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது

சிவகங்கை அருகே குமாரபட்டியில் வேளாண் துறை சாா்பில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்த பண்ணைப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதற்கு வேளாண் உதவி இயக்குநா் வளா்மதி தலைமை வகித்தாா். சிவகங்கை வேளாண் துணை இயக்குநா் (ஓய்வு) மணிவண்ணன் பங்கேற்று, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை உர மேலாண்மை சம்பந்தமான கருத்துகளையும், நெல்லை மதிப்புக் கூட்டு பொருளாக மாற்றி அதிக லாபம் பெறுவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா்.

மேலும் தொழில்நுட்ப உதவி மேலாளா் ராஜா பங்கேற்று வயலில் பறவை பந்தல் அமைத்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தாா். பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் உயிா் பூஞ்சான கொல்லி, உயிா் பாக்டீரீயா பாக்கெட்டுகள் தலா நான்கு வீதம் வழங்கப்பட்டது. இதில், குமாரபட்டி, காராம்போடை உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி வேளாண் தொடா்பான கேள்விகளை கேட்டு அறிந்து கொண்டனா். பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை, வேளாண் அலுவலா் தா்ஷினி, வட்டார தொழில்நுட்ப மேலாளா் தம்பிதுரை, கீதா உள்ளிட்டோா் செய்தனா்.

Tags

Next Story