மக்காச்சோளம் வயல் வெளியில் படைபுழு தாக்குதலா?

மக்காச்சோளம் வயல் வெளியில் படைபுழு தாக்குதலா?

மாணவர்கள்

துறையூர் அடுத்த உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிபா ளையம் கிராமத்தில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மக்காச்சோளம் வயல் வெளியில் படைபுழு தாக்குதலை இனக்கவர்ச்சி பொறி (sex phenomenon trap)மற்றும் அதன் பயன் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் பகுதியில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் விவசாயம் சார்ந்த பல்வேறு களப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஓரு பகுதியாக உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிபா ளையம் கிராமத்தில் எம்.ஐ.டி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் துர்கேஷ்,கோ குல்பிரகாசம், கௌதமன்,குணாளன்,இஷாக்,ஜெயராகவன்,ஜெயந்த் ராஜன், மற்றும் கார்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு வேளாண்மையில் மக்காச்சோளம் வயல் வெளியில் படைபுழு தாக்குதலை கட்டுபடுத்த இனக்கவர்ச்சி பொறி மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story