நிலக்கடலை அறுவடைப் பணியில் வேளாண் மாணவிகள்

எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகளுக்கு அணைக்காடு கிராமத்தில் நிலக்கடலை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள், பட்டுக்கோட்டை பகுதியில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

அதனொரு பகுதியாக, அணைக்காடு கிராமத்தில் உள்ள விவசாயி சிதம்பரத்தை சந்தித்த மாணவிகள், அவர் தனது வயலில் பயிரிடும் நெல், கடலை மற்றும் எள் குறித்து அறிந்து கொண்டனர். மேலும் தற்போது கோடை காலத்தில் கடலை சாகுபடி செய்துள்ள அவரது வயலை நேரில் பார்த்த மாணவிகள் அங்கே அறுவடை மேற்கொள்ளபட்டதைத் தொடர்ந்து, தாங்களும் களத்தில் இறங்கி கடலைக்கொடியை அறுவடை செய்தனர். இதன் மூலம் செயல் முறை விளக்கத்தை மாணவிகள் பெற்றனர்.

Tags

Next Story