ஊரகப் பங்கேற்புத் திறனாய்வில் வேளாண் மாணவிகள்            

ஊரகப் பங்கேற்புத் திறனாய்வில் வேளாண் மாணவிகள்.            
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை கிராமத்தில், ஈச்சங்கோட்டை முனைவர் எம். எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனொரு பகுதியாக தாமரங்கோட்டை கிராமத்தில், ஊரகப் பங்கேற்பு திறனாய்வினை அம்மாணவிகள் நடத்தினர். இந்நிகழ்வில், அக்கிராமத்தின் சமூக வரைபடம், வள வரைபடம், கிராம எல்லை வரைபடம், சமூக வள வரைபடம் ஆகியனவும், அக்கிராமத்தின் முக்கிய நிகழ்வுகளை காலக்கோடு என்னும் வரைபடத்தில் குறிப்பிட்டும், அத்துடன் இணைந்து அக்கிராம மக்களின் தினசரி கால அட்டவணை, கல்வியறிவு விகிதம், இயக்க வரைபடம் முதலியவற்றையும், அவர்களுக்கு தெளிவாக விளக்கினர். அதுமட்டுமின்றி, பயிர் பிரமிடு, நோய் மரம், தீர்வு மரம், பருவகால அட்டவணை போன்றவை பற்றியும் அம்மக்களுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில், கிராம பெரியோர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போன்றோர் ஆர்வமுடன் பங்கேற்றதுடன், வேளாண் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினர்.

Tags

Read MoreRead Less
Next Story