AI தொழில்நுட்பம் வளரும்போது மனிதனுக்கு மூளை பயிற்சியும் சிந்திக்கும் திறன் பயிற்சியும் கொடுக்க வேண்டியது அவசியமாகும் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
Tiruchengode King 24x7 |25 Oct 2025 8:54 PM ISTமனித இனம் வாழ சந்திரனில், செவ்வாயில், சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு AI தொழில்நுட்பம் வளரும்போது மனிதனுக்கு மூளை பயிற்சியும் சிந்திக்கும் திறன் பயிற்சியும் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
திருச்செங்கோடுகே.எஸ்.ஆர். கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி மற்றும் கலை திறன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது இக்கண்காட்சி மற்றும் கலை திறன் நிகழ்ச்சியில் தமிழகத்தின் 24 மாவட்டத்தில் இருந்து 332க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 3124 மாணவ மாணவிகள் 122க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கல்லூரியின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் மோகன் விழாவை ஒருங்கிணைத்தார். இவ்விழாவில் கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் டீன் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார் கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் கோபாலகிருஷ்ணன் துவக்க உரையற்றினார். கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். பிரசன்னா ராஜேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினரின் சாதனைகளை கூறி அறிமுகப்படுத்தினார். விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் நிலவு மனிதர் என்று அழைக்கபடும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் பத்மஶ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கி பேசிய போது கூறியதாவது “இந்தியா விண்வெளியில் சாதனை படைத்தது நம் முயற்சியால் மட்டுமல்ல; பிற நாடுகளின் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டதால் தான் என்றும் மற்றவர்கள் செய்த பிழைகளில் இருந்து நாம் பாடம் கற்றதால் தான் இன்று உலகம் இந்தியாவை கவனிக்கிறது,”என்றும் கூறினார். அவர் தொடர்ந்து, “நம் நாட்டின் எதிர்காலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் தான் உள்ளது என்றும் மாணவர்கள் புதுமை சிந்தனையுடன் செயல்பட்டு, சமூகத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார். மேலும் அவர் “நமக்குள்ள வளத்தை பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள் எனவும் நம் நிலம், நீர், வளம், திறமை - இவைதான் நம் பெரிய சொத்துக்கள் எனவும் அவற்றை அறிவியலுடன் இணைத்தால் தான் நம் நாடு முழுமையான வளர்ச்சியை அடையும்,” என்றும் கூறினார். நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்து, தொழில்நுட்பம் விவசாய வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும் என கூறினார். இந்தியாவில் மிகக்குறைந்த விலையில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு சென்று கொண்டு இருக்கிறது என்றும் மற்றும் வாழ்நாள் முழுவதும் புதிதாக கற்றுக்கொண்டே இருங்கள், எப்பொழுதும் சவாலை எதிர்கொண்டு சந்தர்பத்தை உருவாக்குங்கள் என்று கூறி மாணவ மாணவியருக்கு அறிவுறுத்தினார். இறுதியில் கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் அனைவருக்கும் நன்றிகூறினார்.நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது இந்திய அளவில் மாணவர்கள் விஞ்ஞானத்துறையில் மேம்பட இது போன்ற நிகழ்ச்சிகள் பயன்படுகின்றன அடுத்த கட்டத்துக்கு மாணவர்களை எடுத்துச் செல்லும் முயற்சியாக இன்று போன்ற எக்ஸ்போக்கல் பயன்படும்நிறைய கண்டுபிடிப்புகள் தேவைப்படும் நிலையில் நீரை அதிகம் பயன்படுத்தாத தொழில்நுட்பம் தேவைப்படும் நிலையில் இந்திய அளவில் இதுபோன்ற பல்வேறு கண்டுபிடிப்புகள் தேவைப்படுகின்றன ஆண்கள் பெண்கள் என சம அளவில் விஞ்ஞானிகளாக உருவாகும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது பாராட்டுக்குரியது யாருக்கு பரிசு கொடுப்பது என தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் கண்டுபிடிப்புகள் உள்ளனமுன்பு போல் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க இன்ஸ்பயர் நிகழ்ச்சிகள் நடப்பது சுணக்கமாக இருந்தாலும் வேறு வகைகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் நமது இளம் சந்ததியினரை உருவாக்கம் முயற்சி நடைபெற்று தான் வருகிறது சந்திராயன் மூன்று 16 நாட்கள் செயல்பட்டு உறக்க நிலையில் இருந்தாலும் ஆர்பிட்டர் தொடர்ந்து பணியாற்றி வருகிறது இதன் மூலம் சந்திராயன் நாலு ஐந்து ஆகியவற்றை எங்கு இறக்கலாம் என்ன ஆய்வு மேற்கொள்ள அங்கு வசதி வாய்ப்புகள் உருவாகும் என்பதை கண்காணிக்க முடியும் 4 5 ஆகியவை ஆளில்லாத கடல்களாக இருந்தாலும் இங்கிருந்து ஆய்வுக்கரிகளை கொண்டு செல்லவும் அங்கிருந்து கனிம வளங்களை எடுத்து வரவும் முயற்சி மேற்கொள்ளப்படும் ஹீலியம் 3 என்ற கனிமம்கதிரேக்கம் இல்லாத எரிசக்தியாக பயன்படும்.நீர் வளம் கனிம வளங்கள் மனிதன் வாழ தேவையான வசதிகள் அங்கு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் அல்லது உருவாக்கும் முயற்சியில் இந்த ஆய்வுகள் பயன்படுத்தப்படும் செவ்வாய் கிரகத்திற்கு இதுவரை அதிக சக்தி உள்ள எடை உள்ள ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் பிஎஸ்எல்வி ராக்கெட் பயன்படுத்தியிருக்கிறோம் இதன் மூலம் சிறிய பொருட்ச அளவில் பெரிய இலக்கை அடைந்திருக்கிறோம் இங்கிருந்து இயக்கிய நிலையில் தானியங்கி முறையில் விண்கலத்தை இயக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம் AI தொழில்நுட்பம்இன்று பெரிதாக பேசப்பட்டாலும் மங்கள்யானில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் போது செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை கண்காணிக்க முடிகிறது மூன்று அல்லது நான்கு பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது அருகில் வரும் போது 300 கிலோ மீட்டர் தூரச் செல்லும் போது 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோமீட்டர் வரை செல்லும் நிலையில்ஏற்படும் பருவநிலை மாற்றங்களை செவ்வாய் கிரகத்தில் கண்காணித்து வருகிறோம்ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பது மனித கண்டுபிடிப்புகளின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் என்ற போதும் நடந்து சென்ற போது இருந்த உடற்பயிற்சி தற்போது கிடைப்பதில்லை என்பது போல் கார்கள் வாகனங்கள் வந்ததற்கு பிறகு நடப்பதற்கு வீடுகளிலேயே கருவிகள் வாங்கி வைத்திருப்பதை போல் மனித மூளைக்கும் சிந்திக்கும் திறன் குறைந்து பயிற்சி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட வேண்டும் என்பது உண்மைதான் படித்தவர்களும் படிக்காதவர்களும் மூளையை பயன்படுத்துபவர்களும் பயன்படுத்தாதவர்களும் ஒரே நிலைக்கு செல்லும்போது மூளைக்கு தேவையான பயிற்சி கொடுக்க வேண்டியது அவசியமாகும் எனக் கூறினார்.இந்த அறிவியல் கண்காட்சிகள் சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய சென்னை ஸ்ரீகிருஷ் இன்டர்நேஷனல் பள்ளி,மற்றும் சின்மயா ஹையர் செகண்டரி ஸ்கூல் கோவை ஆகிய பள்ளிகளுக்கு முதல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது இரண்டாம் பரிசு பாண்டமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் பரணிக்கு வழங்கப்பட்டது மூன்றாவது பரிசு பிரண்ட்லைன் அகாடமி ஹை ஸ்கூல் திருப்பூர் என்ற பள்ளி மாணவன் மித்தேசுக்கு வழங்கப்பட்டது. முதல்பரிசு பெற்றஸ்ரீ கணேஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ரிசான்செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்த அறிவியல் கண்காட்சியில்பங்கு பெற்று முதல் பரிசு வென்றுள்ளோம் நாங்கள் லேசர் வீடி ஏஎன்ற கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம் இதன் மூலம் வேளாண்மை துறையில் மனித வளம் குறைவாகவும் கெமிக்கல் இல்லாமலும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படாமலும் கலைகளை அகற்றுவது எப்படி என்பதை எடுத்துக் கூறும் வகையில் எங்கள் கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளோம் இதற்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 வழங்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது என கூறினார்.
Next Story


