அதிமுக செயல்வீரர், செயல்வீரங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் !

அதிமுக செயல்வீரர், செயல்வீரங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் !
 ஆலோசனைக் கூட்டம்
அதிமுக செயல்வீரர், செயல்வீரங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தனி தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் E.ராஜசேகர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடவெண்டும் என்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி சார்பாக அதிமுக செயல்வீரர், செயல்வீரங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்ட கழக செயலார்கள், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து நிலை சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story