அதிமுக கூட்டணி: புரட்சி பாரதம் கட்சி தலைவர் கருத்து

அதிமுக கூட்டணி: புரட்சி பாரதம் கட்சி தலைவர் கருத்து

செய்தியாளர்களை சந்திப்பு

அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து இரண்டொரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024 வருகை ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி அமைப்பது வேட்பாளர்களை அறிவிப்பது போன்ற பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி கே.வி குப்பம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட புரட்சி பாரதம் கட்சிக்கு அதிமுக சார்பில் தொகுதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் அதிமுக சார்பில் புரட்சி பாரதம் கட்சிக்கு சீட்டு ஒதுக்காததால் இன்று திருவள்ளூர் அடுத்த ஆண்டர்சன் பேட்டையில் உள்ள அவரது அலுவலக வளாகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவுடனான கூட்டணியில் இடம் ஒதுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அதிமுகவுடன் ஆன கூட்டணி மேலும் தொடருமா என்பது குறித்து இரண்டொரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் புரட்சி பாரதம் கட்சி சார்பில் தனித்து போட்டியிடும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமையுமா என கேட்டதற்கு நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags

Next Story