கோவை பாராளுமன்ற வேட்பாளரை அறிவித்த அதிமுக!

கோவை பாராளுமன்ற வேட்பாளரை அறிவித்த அதிமுக!

சிங்கை ஜி. ராமச்சந்திரன் 

கோவை பாராளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமசந்திரனை அறிவித்த அதிமுக.

பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கூட்டணி பங்கீடு, வேட்பாளர் தேர்வு முடிவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு வருகிறது. இதில் கோவை அதிமுக வேட்பாளாராக முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சிங்கை கோவிந்தராஜின் மகன் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அறிவிக்கபட்டுள்ளார்.1987ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 தேதி பிறந்த இவர் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக பணியாற்றி வரும் சிங்கை ராமசந்திரன் 2016ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டார்.

தற்போது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவராக உள்ள இவர் பள்ளி படிப்பை பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முடித்த அவர் கோவையில் உள்ள PSG தொழில்நுட்பக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார் .2013ம் ஆண்டு PGDM படிப்பதற்காக ஐஐஎம் அகமதாபாத்தில் சேருவதற்கு முன்பு அவர் ஃபோகஸ் அகாடமி ஃபார் கேரியர் மேம்பாட்டிற்கான மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

2016ஆம் ஆண்டு மார்ச் 23ம் தேதி அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக ராமச்சந்திரனை முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த முதல் கட்சிச் செயலாளர்களில் இவரும் ஒருவர்.பிப்ரவரி 2017ம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி வி.கே.சசிகலாவால கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இரு அணிகளும் இணைந்ததை அடுத்து மீண்டும் அதிமுக ஐடி பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட ராமச்சந்திரன் மாணவர் அரசியலிலும் தீவிரமாக இருந்தவர் ஐஐஎம் அகமதாபாத்தில் மாணவர் விவகார கவுன்சிலின் (எஸ்ஏசி) பொதுச் செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

Tags

Next Story