தேர்தல் முடிந்ததும் அதிமுக - பா.ஜ.க ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொள்ளும்
எம்.பி கனிமொழி
திமுகவை பார்த்து ஸ்டிக்கா் ஒட்டுவதாக சொல்கின்றனர் , ஆனால் திமுக திட்டத்திற்கு தான் பா.ஜ.க ஸ்டிக்கர் ஒட்டுகிறது, தேர்தல் முடிந்த பிறகு அதிமுக - பா.ஜ.க ஆகிய இரண்டு ஸ்டிக்கர்களும் ஒட்டிக்கொள்ளும், மக்கள் அவர்களை நம்ப வேண்டாம் என எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
எல்லோருக்கும் எல்லாம் , முதல்வரின் பிறந்தநாள் விழா மற்றும் தமிழக நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக துணை பொதுசெயலாளரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி , தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய எம்.பி கனிமொழி , மணிப்பூர் பகுதிகளுக்கு நேரில் செல்லாத பிரதமர் , தமிழகத்திற்கு வர நேரம் இருக்கிறது காரணம் தேர்தல் வருகிறது என்பதால் தான் என்றும் தமிழகத்திற்பே வந்து குடியேறினால் கூட தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றார் திமுகவை பார்த்து ஸ்டிக்கா் ஒட்டுவதாக சொல்கின்றனர் , ஆனால் திமுக திட்டத்திற்கு தான் பா.ஜ.க ஸ்டிக்கர் ஒட்டுகிறது என்றார்.தேர்தல் முடிந்த பிறகு அதிமுக - பா.ஜ.க ஆகிய இரண்டு ஸ்டிக்கர்களும் ஒட்டிக்கொள்ளும் என்றும் மக்கள் நம்ப வேண்டாம் என்றார்.
Next Story