அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டம்



சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பெரியேரிபட்டி உள்ளிட்ட ஓமலூர் மேற்கு மற்றும் தாரமங்கலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி ஆய்வு கூட்டங்கள் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் ஓமலூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி, சிக்கம்பட்டி, எம்.செட்டிப்பட்டி, பச்சனம்பட்டி, மற்றும் தாரமங்கலம் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மானத்தாள், மல்லிக்குட்டை, ராமிரெட்டிபட்டி, செலவடை உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள பூத் கமிட்டி மகளிர் அணி, இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஓமலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான ஆர்.மணி உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் எஸ்எஸ்கேஆர் ராஜேந்திரன், கோவிந்தராஜ், சித்தேஸ்வரன், சுப்பிரமணியன், மணிமுத்து பேரூர் செயலாளர்கள் கோவிந்தசாமி, சரவணன், கணேசன் உள்ளிட்ட அதிமுக கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




