கோவையில் அதிமுக பிரச்சாரம்

கோவையில் அதிமுக பிரச்சாரம்

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார்.


கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார்.

கோவை பந்தைய சாலையில் உள்ள ஆல் ஸோல்ஸ் தேவாலயத்தில் பேராயர் திமோத்தி ரவீந்தர் அவர்களை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுடன் இணைந்து வாக்கு சேகரித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் வெறும் மூன்று சதவீத வாக்கு வைத்திருக்கும் பாஜக கோவையில் வெல்லப்போவது இல்லை என்றும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் சிங்கை ராமச்சந்திரன் வெற்றிபெறுவது 100 சதவிகிதம் உறுதி என்றவர் பாஜக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் என தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக மக்களுக்காக எதையும் செய்யவில்லை எனவும் அதிமுக ஆட்சியில் கோவையை மாற்றி காட்டியுள்ளதாக கூறிய அவர் ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டுகள் வளர்ச்சியை கோவையில் செய்துள்ளதாக தெரிவித்தார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவால்தான் கோவையில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் ஆட்களை வைத்து போலியான கருத்துகணிப்புகளை வெளியிட வைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தல் களத்தில் பூத்தில் வேலை செய்வதற்க்கு முதலில் பாஜக ஆட்களை போடட்டும் பின்னர் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார்.அதிமுக பொன்விழா கண்ட கட்சி எனவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆண்ட கட்சி அப்படி இருக்கையில் வந்து மூன்றாண்டுகள் ஆன பாஜக அதிமுகவை அழித்துவிடுவேன், எடப்பாடியாரை கானாமல் செய்துவிடுவேன் என்று வாய்க்கு வந்தபடி பேசுவது நியாயமா என்று கேள்வி எழுப்பினார்?அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போனதாகவும் தெரிவித்தார். ஏர்போர்ட் விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கி 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி கொடுத்தது எடப்பாடியார் ஆட்சியில் தான் எனவும் அதன் பிறகு ஆட்சி அமைத்த திமுக அரசும் எதுவும் செய்யவில்லை மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை என்றவர் ஆனைமலை நல்லாறு திட்டத்தை நடைமுறை படுத்தியது எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான் எனவும் கேரளா முதல்வர் பினராய் விஜயனுடன் எடப்பாடியார் பேசி நிலையில் தானும் பொள்ளாச்சி ஜெயராமனும் நேரில் சென்று பார்த்து திட்டத்தை செயல்படுத்தினோம் என்றவர் திமுக அந்த திட்டத்தை கைவிட்டதாக தெரிவித்தார்.பாஜக கட்சி வாட்ஸப்,யூ டூயூப்களில் மட்டுமே அரசியல் செய்து வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தலில் சிங்கை ராமச்சந்திரன் 100% சதவிகிதம் வெற்றிபெறுவார் என்றும் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன்,கழக அமைப்பு செயலாளரும் கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story