கன்னியாகுமரியில் அதிமுக பிரச்சாரம்

கன்னியாகுமரியில் அதிமுக பிரச்சாரம்

கன்னியாகுமரியில் அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.


கன்னியாகுமரியில் அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று குளச்சல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவர் திக்கணங்கோடு, பூக்கடை உள்ளிட்ட 52 கிராமங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டு பிரசாரம் செய்தார். பின்னர் குமாரகோவிலுக்கு வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் வேட்பாளர் பேசும்போது,- அதிமுக ஆட்சியில் பசுமை வீடு திட்டம் கொண்டுவரப்பட்டு மக்கள் பயனடைந்தார்கள். இந்த திட்டம் தற்போது திமுக அரசில் நிறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்து செய்த ஆட்சி அதிமுக ஆட்சி. அனைத்து உணவு பொருட்களும் 40 சதவீதம் திமுக ஆட்சியில் விலை உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஜான் தங்கம், மாவட்ட அவை தலைவர் சிவ குற்றாலம், பொருளாளர் சில்வெஸ்டர், தக்கலை ஒன்றிய செயலாளர் மெர்லியன்ட் தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story