திருப்பனந்தாள் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

திருப்பனந்தாள் ஒன்றிய பகுதிகளில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் பேரூராட்சியிலும்ழ மயிலாடுதுறை நாடாளுமன்ற அதிமுக வெற்றி வேட்பாளர் பாபு, தஞ்சை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்கே. பாரதிமோகன் தலைமையில் ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தின் முன்னே செல்ல திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அதிமுக மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜேந்திரன், தேமுதிக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story