அதிமுக வேட்பாளர் மங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ப.கருப்பையா கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிக்கரித்தார்.

உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கிராமத்து பிள்ளை, உங்கள் குரலுக்கு ஓடோடி வரும் பிள்ளை, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன் என திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் ப.கருப்பையா கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்கனூர் பகுதியில் வாக்கு சேகரிக்கரித்தார்.

அப்பொழுது அங்கு புதிதாய் பிறந்த குழந்தைக்கு அழகுராஜா என பெயர் சூட்டினார் முன்னாள் அமைச்சர் டாக்டர். சி .விஜயபாஸ்கர். தமிழகம் முழுவதும் வரும் 19ஆம் தேதி முதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அதிமுக சார்பில் தமிழகமெங்கும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு தற்பொழுது அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தர்வ கோட்டை தொகுதி உள்ள மங்கனூர் கிராமத்தில் திருச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கருப்பையா இன்று காலை முதல் வாக்கு சேகரித்து வருகிறார். அப்பொழுது அவர் பொதுமக்களிடம் தெரிவிக்கையில், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் கிராமத்து பிள்ளை, கேட்ட குறளுக்கு ஓடோடி வரும் பிள்ளை, எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். எனவும் இப்பகுதியில் என்னென்ன பிரச்சனை உள்ளதோ அனைத்தையும் தீர்ப்பேன் என வாக்கு சேகரித்தார்.

பின்னர் அங்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் .சி. விஜயபாஸ்கர் அழகுராஜா என பெயர் சூட்டினார். அப்பொழுது அங்கு இருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் கருப்பையா மற்றும் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கருக்கு அப்பகுதி பெண்கள் ஆராத்தி எடுத்து வெற்றி திலகம்மிட்டனர். பெண்களுடன் வேட்பாளரும் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரித்தார். உடன் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story