கோவை அருகே பழங்குடியின மக்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கோவனூரில் அதிமுக சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமாருடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாலமலையில் பிரச்சாரத்தை தொடங்கிய சிங்கை ராமசந்திரன் கோவனூரில் பட்டத்தரிசியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அப்பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.மேலும் பாலமலை அருகிலுள்ள ஆதிவாசி கிராமங்களான பெரும்பதி,பெருக்கைபதி, மாங்குழி,பசுமணி, பசுமணிப்புதூர், குஞ்சூர்பதி உள்ளிட்ட 7 கிராமங்களில் உள்ள இருளர் இன மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
வாக்கு சேகரிக்க சென்ற சிங்கை ராமசந்திரனுக்கு அப்பகுதி ஆதிவாசி மக்கள் பாரம்பரிய நடனம் ஆடி வேட்பாளரை வரவேற்றனர்.அப்போது அவர்களுடன் இணைந்து சிங்கை ராமசந்திரன் பாரம்பரிய நடனம் ஆடினார்.தொடர்ந்து அவர்களிடம் பேசும்போது ஆதிவாசி மக்களுக்கு பேருந்து ,மின்சார மற்றும் அடிப்படை வசதிகளை இப்பகுதி மக்களுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன் என்று கூறினார்.