ஈரோடு பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்: ஆற்றல் அசோக்குமார்
அதிமுக பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் ஆற்றல் அசோக்குமார் 1970 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிறந்தவர். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, புதுப்பாளையம் கிராமத்தை பூர்விமாகக் கொண்டவர். இவருடைய பெற்றோர்கள் தந்தை ஆறுமுகம் மற்றும் தாயார் சௌந்தரம் ஆகியோர் பேராசிரியராக பணியாற்றியவர்கள். மேலும் இவர் தாய் சௌந்தரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக 1987 முதல் 1991 வரை பணியாற்றியுள்ளார். இவருக்கு கருணாம்பிகா என்ற மனைவியும் ,அஸ்வின்குமார்,நிதின்குமார் என்ற இரு மகன்கள் மனைவி கருணாம்பிகாவின் தாய் மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் டாக்டர். சரஸ்வதி ஆவர்.
ஆற்றல் அசோக்குமார் இளங்கலை மின்பொறியியல் படிப்பை கோயமுத்தூரிலும், முதுநிலை மின் மற்றும் கணினி பொறியியல் மற்றும் முதுநிலை வணிக நிர்வாகம் கல்வியை அமெரிக்காவிலும் பயின்றவர். உலகின் தலைசிறந்த நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 2000 ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர் மேலும் இரண்டு அமெரிக்க ஐடி நிறுவனங்களில் 8 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியுள்ளார். ஆற்றல் அசோக்குமார் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், காங்கேயம், தாராபுரம், மொடக்குறிச்சி தொகுதிகளில் மக்கள் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளார். மக்களுக்கு உதவுவதற்காகவே 200க்கு மேற்பட்ட பணியாளர்களைபணியில் அமர்த்தி சேவை செய்து வருகின்றார். ஆற்றல் அறக்கட்டளை ,சங்கமம் அறக்கட்டளை, ஆத்மா அறக்கட்டளை ஆகிய இயக்கங்களைத் தொடங்கி சமூக ஆர்வலராகவும் பணியாற்றிய இவர் தி இந்தியன் பப்ளிக் குழுமம், டிப்ஸ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர், குலோப் எடுகேட் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ், கிட்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, டிப்ஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஆகிய கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகின்றார். மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே கோயில்கள், பள்ளி கட்டிடங்கள் சீரமைக்கும் பணி ஆகிய பணிகளில் சிறப்பாகவும் சீரிய முறையிலும் உதவி செய்து வரும் ஆற்றல் அசோக்குமார் கடந்து ஓராண்டுகளாக காங்கேயம், ஈரோடு, தாராபுரம், மொடக்குறிச்சி ,ஆகிய பகுதிகளில் ஆற்றல் உணவகம் தொடங்கி ஏழை எளிய மக்களுக்கு ரூபாய் 10 விலைக்கு வயிறார உணவளித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.
மேலும் சமுதாயக்கூடம் அமைத்தல், கிராம வீடுகள் அமைத்து மற்றும் சீரமைப்பு செய்தல் திருவிளக்கு பூஜை நடத்துதல் சமய பழக்க வழக்கங்களை மீட்டு எடுப்பது முண்கல பணியாளர்களை கௌரவித்து ஊக்குவிப்பது ,இளைஞர்கள் நலன் மற்றும் மேம்பாடு செய்வது, ஆற்றல் மருத்துவமனை, மருத்துவ ஆலோசனை ரூபாய் 10 விலைக்கு வழங்குவது, கிராமப்புற பெண்களின் மேம்பாட்டு திட்டங்களை வகுப்பது போன்ற மக்கள் நலனை தன்னுடைய நலன் என வாழ்ந்து வருபவர் ஆற்றல் அசோக் குமார்.. தேர்தலில் போட்டியிடுவது இவருக்கு புதியதாக இருந்தாலும் களப்பணி ஆற்றுவதிலும் பொதுமக்களிடம் அன்பு காட்டுவதிலும் இவருக்கு நிகர் இவரே