சங்கிரியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

சங்கிரியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

வேட்பாளர் அறிமுக கூட்டம் 

சங்ககிரியில் நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம்,சங்ககிரியில் நடைபெற்ற நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெறப்பட்ட அரசு தான் அதிமுக அரசு என்றும்,

கர்நாடகாவில் திமுக கூட்டணி கட்சி ஆட்சியில் இருந்தும் தமிழகத்திற்கு தண்ணீர் பெற முடியவில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டி பேசினார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி அறிமுக மற்றும் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடைபெற்றது. அ

ப்போது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி ஆங்கிலத்தில் பேசி அதற்கு தமிழிலும் விளக்கம் அளித்து தனக்கு வாக்களித்தால் உண்மையாக உழைப்பேன் என்று ம அதற்காக இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தருவதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பையும் பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசு என்றும் தற்போது கர்நாடகாவில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கரத்தை வலுப்படுத்த தமிழகத்தின் உரிமையை மீட்டெடுக்க வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணியை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அப்போது சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ரத்தனம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா சுபா உட்பட அதிமுக தேமுதிக கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் உடனிந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story