அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளார் பசிலியான் தோவாளை மலர்  சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத் என்பவர் போட்டியிடுகிறார். இவர் முக்கிய பிரமுகர்களுடன் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று தோவாளை மலர் சந்தையில் பசிலி யான் நசரேத் பூ வியாபாரிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான தளவாய் சுந்தரம், மாவட்ட இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். பின்னர் இவர் தென்தாமரைகுளம் பகுதியில் அமைந்துள்ள சந்தை பகுதியில் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story