அதிமுக வேட்பாளர் தீவிரவாக்கு சேகரிப்பு
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு MGR வேடமணிந்த ஒருவருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மணி சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி ஒன்றியம், இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியில் விலைகாசி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதி அடைந்து வருவதாகவும் பத்தாண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாத அரசு திமுக அரசு என்று குற்றம் சாட்டினார்.
மேலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை எனவும் இடங்கணசாலை நகராட்சி பகுதிகளில் விசைத்தறி தொழில் நம்பியுள்ள மக்கள் வரி உயர்வால் பெரும் அவதி அடைந்து வருவதாகவும் சூரத்திலிருந்து வரும் போலியான சேலை ரகங்களால் பட்டு சேலை விற்பனை இடங்கணசாலை பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தான் வெற்றி பெற்றால் இது குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து விசைத்தறி தொழிலே மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நூறு ஏரி திட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் நிரப்பும் பணியை இந்த திமுக அரசு நிறுத்தி வைத்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாகவும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நான் வெற்றி பெற்றால் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை பூர்த்தி செய்ய பாடுபடுவேன் எனவும் பொதுமக்களிடத்தில் வாக்குறுதிகளை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு MGR வேடமணிந்த ஒருவருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி, எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் உட்பட அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.