முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் !

முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் !

அதிமுக வேட்பாளர்

மேட்டூரில் சாலையோர கடையில் அதிமுக வேட்பாளர் முறுக்கு சுட்டு வாக்கு சேகரித்தார்.
மேட்டூர் அருகே மேச்சேரியில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகன் சாலையோர கடையில் முறுக்கு சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் மருத்துவர் அசோகன் மேட்டூர் அருகே மேச்சேரியில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் அசோகனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய வேட்பாளர் அசோகன் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் , பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5% உள் ஒதுக்கீடு , வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி போன்ற திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியில் சாலையோர கடையில் முறுக்கு சுட்டு அப்பகுதி பொது மக்களிடையே நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story