கெங்கவல்லி விபத்தில் அதிமுக நகர செயலாளர் பலி

கெங்கவல்லி விபத்தில் அதிமுக நகர செயலாளர் பலி
விபத்தில் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பழனிச்சாமி விபத்தில் சிக்கி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சி அ.தி.மு.க. நகர செயலாளர் பதவி வகித்து வந்தவர் பழனிசாமி (வயது 63). இவர் நேற்று மதியம் செந்தாரப்பட்டி அருகே துக்ககாரியத்திற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் தம்மம்பட்டிக்கு சென்று மாலை வாங்கி கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags

Next Story