கன்னியாகுமரியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரியில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் தளவாய்சுந்தரம் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.


கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் தளவாய்சுந்தரம் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் தளவாய்சுந்தரம் தலைமையில், குமரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் முன்னிலையில், கன்னியா குமரி பாராளுமன்ற அ.தி. மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத் தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.அப்போது வேட்பாளரை ஆதரித்து பேச்சிபாறையில் அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் மத்தியில் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பேசியதாவது,எடப்பாடி ஆட்சியின் போது அரசு ரப்பர் கழகம் மற்றும் தனியார் ரப்பர் தொழிலாளர்களுக்கு தேவையான அன்றைய வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து கொடுத்தது. தற்போது ஆட்சியில் இருக் கின்ற இந்த அரசு விவசாயிகளின் நலனை பாதுகாப்பது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றும் வகையில், வேளாண்மைக்கு என்று தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.ரப்பர் விவசாயம் என் பதை விவசாயத்துறை அமைச்சர் மறந்து விட்டாரா.வேளாண்மை துறை பட்ஜெட்டில் ரப்பர் விவசாயம் குறித்தோ ரப்பர் தொழிலாளர்களின் முன்னேற்றம் குறித்தோ எந்தவித தகவலும் இடம் பெறவில்லை மத்திய மாநில அரசுகள் ரப்பர் தொழில் மேம்பாட்டிற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அ.தி.மு.க ஆட்சியில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை யின் கீழ் குலசேகரத்தில் ரப்பர் கிட்டங்கி அமைக்க வேளாண்மை ரூ. 68 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு இயங்கி வந்தது. குல சேகரம் ரப்பர் கிட்டங்கியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.50 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது என பேசினார்.

Tags

Next Story