போலி டோக்கன் வழங்கிய விவகாரம்-காங்கிரஸ் மீது அதிமுகவினர் புகார்
போலி டோக்கன் வழங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் மீது அதிமுகவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்தனர்.
விருதுநகரில் போலி டோக்கன் வழங்கிய விவகாரம்-காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார்... விருதுநகர் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஆண்டிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டத்திற்கான உத்திரவாத அட்டையை வழங்குவது போல் வாக்காளர்களின் ஆதார் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய நூதன முறையில் டோக்கன் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக இன்று காவல்துறையினர் காங்கிரஸ் நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி புதிய திட்டத்தின் உத்தரவாத அட்டையை வழங்கி நூதன முறையில் பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் மாரீஸ்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
Next Story