அதிமுக ஆலோசனை கூட்டம்

அதிமுக ஆலோசனை கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செங்கோட்டையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். மகளிரணி துணைச் செயலா் வி.எம். ராஜலெட்சுமி, மாவட்ட அவைத் தலைவா் வி.பி. மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், இணைச் செயலா் சண்முகப்ரியா, பொருளாளா் சண்முகையா, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலா் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா, மொழிப்போா் தியாகிகள் தின விழா பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தோ்தல் பணி குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒன்றியச் செயலா்கள் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story