விருத்தாச்சலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கடலூர் மேற்கு மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இன்று விருத்தாசலம் மாவட்ட கழக அலுவலகத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அடையாளம் காட்டுகின்ற வேட்பாளர்களை, கடலூர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளில் அமோக வெற்றி பெற, அயராது பாடுபடுவது எனவும்,
போதைப் பொருள் மாநிலமாக தமிழகத்தை மாற்றி தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கையை குட்டிச்சுவராக்கும் விடியா திமுக அரசை கண்டித்தும்,
பெயரளவிற்கு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து விட்டு ஆன்லைன் சூதாட்ட கம்பெனி நடத்துகின்ற FUTERE GAMINGS கம்பெனியிடமிருந்து நிதியைப் பெற்று கட்சி நடத்தும் விடியா திமுக அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.