பிப்-1 ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த அதிமுக ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
அதிமுக ஆலோசனை கூட்டம்- முன்னாள் அரசு கொறடா பங்கேற்பு
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அரசு கொறடா தாமரை. இராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் பணிப்பெண்ணை தாக்கிய பல்லாவரம் எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப்ரவரி மாதம் 01 ஆம் தேதி அரியலூர் மாவட்ட தலைநகரில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் குறித்து ஆலோசிக்கபட்டது. மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதில் ஜெயங்கொண்டம் முன்னாள் எம்எல்ஏ ராம.ஜெயலிங்கம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story