நெல்லை மாநகராட்சியை குற்றம் சாட்டிய அதிமுக மாவட்ட செயலாளர்
அதிமுக மாவட்ட செயலாளர்
தமிழகத்தில் வளர்ந்து வரும் மாநகராட்சிகளில் நெல்லை மாநகராட்சி ஒன்று. இந்த மாநகராட்சி கடந்த 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளை பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது.
நெல்லை மாநகர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வியாபாரிகள் கடைகளில் உள்ள பொருள்களை இழந்து நஷ்டம் அடைந்து உள்ளனர்.மேலும் இந்த பாதிப்பில் இருந்து மீளாத வியாபாரிகள் தற்போது மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் கடைகள் முன்பு உள்ள கூரைகள் மற்றும் படிக்கட்டுகள் உள்ளிட்டத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் வியாபாரிகள் பெரும் வேதனைக்கு உள்ளான நிலையில் நெல்லை மாநகர அதிமுகவினர் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா ஆக்கிரமிப்புகளில் சேதம் ஆன கடைகளை நேற்று பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்தித்து அவர் கூறும் பொழுது வியாபாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து மீலாது நிலையில் மாநகராட்சி இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்வது நியாயம் இல்லை என கூறினார்.