ராசிபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் - பி.தங்கமணி திறந்து வைத்தார்.

ராசிபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் - பி.தங்கமணி திறந்து வைத்தார்.
X
ராசிபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் பணிமனை - முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்தார்..

நாமக்கல் பாராளுமன்றத் தொகுதி, ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராசிபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில் ராசிபுரம் நகரக் கழகச் செயலாளரும் முன்னாள் நகர மன்ற தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இவ்விழாவில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், குமாரபாளையம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு முன்னிலை வகித்து தேர்தல் அலுவலகம் பணிமனையை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர், ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.பி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கே.பி.எஸ்.சுரேஷ் குமார், வழக்கறிஞர் தனசேகர், கூட்டணி கட்சியினர் தேமுதிக வடக்கு மாவட்ட கழக செயலாளர் டி.எஸ். விஜய்சரவணன், தேமுதிக நகர கழக செயலாளர் அ.இளையராஜா, உட்பட தொகுதிக்குட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story