எடப்பாடியில் அதிமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

எடப்பாடியில் அதிமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்பாடுகள் தீவிரம் 

எடப்பாடியில் அதிமுக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்ற உள்ளார்.
அதிமுகவின் பொதுச் செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம் எடப்பாடி பஸ் நிலையத்தில் இன்று மாலை 6 மணி அளவில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் எடப்பாடி நகரக் கழக செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான முருகன் தலைமையிலான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story