அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கிய திட்டங்கள் நிறுத்தம்-எஸ்.பி.வேலுமணி
கூட்டத்தில் பேசும் முன்னாள் அமைச்சர்
கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அவைத்தலைவர் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி பேசுகையில் தமிழகத்தில் அனைவரும் அதிமுகவிற்கு ஓட்டுப்போட தயாராகிவிட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவதையே மக்கள் விரும்புகிறார்கள் என தெரிவித்தார்.
சமீப காலமாக மாணவர்கள், இளைஞர்கள் அதிகமானோர் கட்சியில் இணைந்து வருவதாக கூறியவர் அதிமுக ஆட்சியில் தெருக்களில் சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கிய திட்டங்களை எல்லாம் நிறுத்தபட்டதாக தெரிவித்தார்.
தெருமுனை பிரச்சாரங்கள் மூலமாக இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து பேசிய அவர் நமது ஆட்சியில் ஏராளமான பெண்களுக்கு வங்கிகடன் பெற்று தந்துள்ளதாக பேசியவர் மொழிபோர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட அளவில் கோவை செல்வபுரம் பகுதியில் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன், கழக அமைப்புச் செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான தாமோதரன்,சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.