லால்குடி தொகுதியை அதிமுக ஆட்சி புறக்கணிப்பு: அமைச்சர் நேரு

லால்குடி தொகுதியை அதிமுக ஆட்சி புறக்கணிப்பு: அமைச்சர் நேரு
X

அமைச்சர் நேரு பிரச்சாரம்

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மணக்காலில் திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே என்.நேரு தேர்தல் பரப்புரை செய்தார்.

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து மணக்காலில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு வாக்குசேகரில் ஈடுபட்டார் .

அப்போது பேசியதாவது தமிழகத்தில் திமுக ஆட்சி செய்யும் காலத்தில் தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் வந்தாலும் லால்குடி தொகுதிக்கு நிறைவேற்றப்படும். கொள்ளிடம் பாலம்,விவசாய கல்லூரி,கலைக் கல்லூரி,மகளிருக்கான ஐடியை, பாலிடெக்னிக் கல்லூரி முடித்தபெண்களுக்கு பல்வேறு அடிப்படை தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது, நீதிமன்ற வளாகம்,நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், திருச்சி சென்னை சாலை மற்றும் சிதம்பர சாலையில் இன்னைக்கும் வகையில்புதிய இணைப்புச் சாலைகள் அமைக்க உள்ளது. அதற்கானஆயத்த பணியில் பணிகள் நடைபெற்று வருகிறது இதுபோலபல்வேறு புதியபல்வேறு திட்டங்கள் லால்குடி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட உள்ளன.

பத்தாண்டு அதிமுக ஆட்சியில் லால்குடி சட்டமன்றத் தொகுதியை அதிமுக புறக்கணித்து எந்த திட்டமும் நிறைவேற்றப்படாமல் புறக்கணித்து வந்தன.தமிழகத்தில் எப்பொழுதொல்லாம் திமுக ஆட்சி செய்கிறததோ்அப்பொழுதொல்லாம் லால்குடியில் ஒவ்வொரு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.தொடர்ந்து மணக்கால்,ஆங்கரை , திருமங்கலம்,வாளாடி புது ரோடு, புதுக்குடி , சிறு மருதூர்,

மகிழம்பாடி, நெய்க்குப்பை, புதூர் உத்தமனூர், தச்சங்குறிச்சி பல்லபுரம், பூவாளூர் பேரூர் கழகம் உள்பட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரிக்கப்பட்டனர். இந்த வாக்கு சேகரிப்பின் போது லால்குடி நகர மன்ற தலைவர் துரைமாணிக்கம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன்,

கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்கலை, மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்குழு சந்திரன், விடுதலை சிறுத்தை மாவட்ட தலைவர் குரு அன்பு செல்வன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story