ஜனநாயகத்தைப் பற்றி பேச அதிமுகவுக்கு தகுதி கிடையாது: பி.ஆர் நடராஜன்

ஜனநாயகத்தைப் பற்றி பேச அதிமுகவுக்கு தகுதி கிடையாது: பி.ஆர் நடராஜன்

பி.ஆர் நடராஜன் எம்.பி 

ஜனநாயகத்தைப் பற்றி பேச அதிமுகவுக்கு தகுதி கிடையாது என பி.ஆர் நடராஜன் எம்.பி தெரிவித்துள்ளார்.
மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதன் தலைவராக பொறுப்பேற்ற கூட்டத்தை நடத்திய கோவை மாவட்ட எம் பி நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூட்டத்தில் எந்த மாதிரியான திட்டங்கள் குறித்து பேசப்பட்டது என எடுத்துரைத்தார்.மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும் அதிமுக எம்எல்ஏக்களையும் அதிக அளவில் இருப்பதால் கோவை புறக்கணிக்கப்படுவதாக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து கேள்விக்கு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தது எனவும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற போதிலும் அந்த காலகட்டத்தில் ஒரு அரசு விழாவிற்கும் தன்னை அழைக்கவில்லை என தெரிவித்தார். ஜனநாயகத்தை பற்றி பேச இவர்களுக்கு தகுதியே இல்லை என சாடினார்.எந்த அரசு விழா அழைப்பிதழிலும் என் பெயரை போடாதவர அப்படிப்பட்ட நபர்கள் இன்று ஜனநாயகத்தைப் பற்றி வகுப்பு எடுக்கிறார்கள் என விமர்சித்தார்.யாரும் இவர்களது கருத்துகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்த நடராஜன் அரசு சார்பில் நடைபெறும் விழாக்களுக்கு கொடுக்கப்படும் அழைப்பிதழ்கள் அனைத்திலும் அவர்கள் பெயர் இடம்பெறுவதை கண்டு அவர்கள் வெட்கப்பட வேண்டும் எனவும் அதிமுக அரசு செய்ய தவறியதை திமுக அரசின் நிர்வாகம் செய்கிறது என அவர்கள் வெட்கப்பட வேண்டும் என கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அது குறித்த கேள்விக்கு இந்த கூட்டத்திற்கு நான் தான் சேர்மன் எனவும் தான் இல்லையென்றால் துணை சேர்மன் ஆக பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவார் மாவட்ட ஆட்சித் தலைவர் இக்குழுவுக்கு செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர் இல்லையென்றால் மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது சப் கலெக்டர் கூட்டத்தை நடத்தலாம் என வழிகாட்டு நெறிமுறைகளே உள்ளது பதில் அளித்தார்.தான் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த சூழலில் எம்.பி நிதி வருடத்திற்கு ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கபடும் நிலையில் அவற்றில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி பிடிக்கபட்டு 90 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டியாக சென்று விடுவதாகவும் நான்கு கோடியே 10 லட்சம் தான் பணம் கிடைக்கும் என தெரிவித்தார்.மூன்று ஆண்டுகள் மட்டுமே நிதி கொடுக்கப்பட்டதாகவும் இரண்டு ஆண்டுகள் நிதியை கொரோனா பெயரைச் சொல்லி பிரதமர் எடுத்துக்கொண்டு தனி விமானம் ஒன்றை வாங்கி ஓட்டிக் கொண்டுள்ளார் எனவும் விமர்சித்தார்.அந்த நிதி தமிழ்நாட்டுக்கு வர வேண்டியது எனவும் மொத்தம் பதினேழு கோடிகள் இந்த ஐந்து ஆண்டுகளில் தமக்கு வழங்கப்பட்டதாகவும் அந்த பதினேழு கோடி ரூபாய்க்குமான பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாக எம்பி நடராஜன் கூறினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக பேசியவர் தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த மற்றும் அவர்கள் கேட்ட தொகை வருவதற்கு உண்டான வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் நகலை கொடுத்துள்ளோம் என்றவர் மாநில அமைச்சரகத்தின் இடத்தில் இதனை பேசி பரிசீலித்து அமலாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுப்பதாக மாநகராட்சி ஆணையரும் கூட்டத்தில் தெரிவித்திருப்பதாக கூறினார்.

Tags

Next Story