அமைச்சரை தீவிரவாதி என போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் காவல் நிலையத்தில் முற்றுகை

அமைச்சரை தீவிரவாதி என போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் காவல் நிலையத்தில்  முற்றுகை

 அமைச்சரை தீவிரவாதி என போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் காவல் நிலையத்தில் முற்றுகை

கோவை முன்னாள் அமைச்சரை தீவிரவாதி என போஸ்டர் ஒட்டியதால் அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் மனு.
கோவை-அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி புகைபடத்துடன் தீவுரவாதி என வாசகங்களுடன் கோவைப்புதூர் பகுதியில் மர்ம நபர்கள் துண்டு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் துண்டு போஸ்டர்களை அப்புறபடுத்தியதுடன் 90வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் தலைமையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு துண்டு போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சரின் நற்பெயதுக்கு களங்கம் விளைவிக்கும் நடந்து கொண்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி ராஜாவிடம் புகார் மனு அளித்தனர்.இதற்கு முன்பும் இதேபோல் சம்பவம் நடைபெற்ற நிலையில் புகார் அளிக்கபட்டுருந்த நிலையில் காவல்துறையினர் அலட்சியமாக மீண்டும் மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.முன்னாள் அமைச்சரை தீவிரவாதி என சித்தரித்து துண்டு போஸ்டர் ஒட்டிய நிலையில் குனியமுத்தூர் காவல் நிலையத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags

Next Story