விருதுநகர் : முன்னாள் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடிய அதிமுகவினர்

விருதுநகர் : முன்னாள் முதல்வர் பிறந்தநாள் கொண்டாடிய அதிமுகவினர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிரதானத்தை முன்னிட்டு அவர திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
விருதுநாகர் மாவட்டம், ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதா அவர்கள் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடினர்.

அதே போல் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமையில் அம்மா உணவகம் முன்பு ஜெயலிதா அவர்கள் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்சியில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், MGR மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ், அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story