தேவர் ஜெயந்தி: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி: அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேவர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முத்துராமலிங்கத் தேவர் திருமகனிரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைப்பு செயலாளர் என் சின்னத்துரை உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்பு தேசமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று வாழ்ந்து மறைந்த முத்துராமலிங்கத் தேவர் திருமகனிரின் 116 வது பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தேவர் திருமகனாரை போற்றும் வகையில் தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள பசும் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் கழக அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி மாவட்ட மேலிட தேர்தல் பார்வையாளருமான என் சின்னத்துரை, உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கழக மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் நகர் மன்ற தலைவர் இரா.ஹென்றி, மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், பகுதி செயலாளர்கள் முருகன் சேவியர், நட்டார் முத்து, பகுதி இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம், நிலா சந்திரன், டைகர் சிவா, நடராஜன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story