கன்னியாகுமரியில் கனிமவள திருட்டு அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

கன்னியாகுமரியில் கனிமவள திருட்டு அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு
நாகர்கோவிலில் நீர், மோர் பந்தல் திறந்த அதிமுக எம்எல் ஏ
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் அதிகளவு கனிமவள கொள்ளை நடைப்பெறுவதாக அதிமுக எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், முழுவதும் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவில் வடக்கு பகுதியான வடசேரி எம்ஜிஆர் சிலை அருகில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நாகர்கோவில் வடக்கு பகுதி செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான ஸ்ரீ லிஜா தலைமை வகித்தார். கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தண்ணீர், மோர், தார் பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், - கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கனிம வளங்கள் அதிக அளவு திருடப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கு அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவித அனுமதி இல்லாமல் கனி வளங்கள் கடத்தப்படுகின்றன என்று கூறினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story