பள்ளிவாசல்களில் வாக்கு சேகரித்த அதிமுக நிர்வாகிகள்

பள்ளிவாசல்களில் வாக்கு சேகரித்த அதிமுக நிர்வாகிகள்
X

வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள பள்ளிவாசல்களில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து லால்குடி நகர அதிமுக நிர்வாகிகள் ரமலான் வாழ்த்து சொல்லி வாக்கு சேகரித்தனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்பியுமான ப.குமார் ஆலோசனைப்படி லால்குடியில் உள்ள நகர பள்ளிவாசல்களான சாந்தி நகர் ஸலாமத் பள்ளிவாசல்,சிறுதையூர் கடைவீதி ஜாமியா பள்ளிவாசல் உமர்நகர் உமர் ரலி பள்ளிவாசல், ,லால்குடி (உள் பள்ளி)ஜாமியா பள்ளிவாசல் என நான்கு பள்ளிவாசல்களில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக் கூறி காலை 8:00 மணி முதல் 11.00 மணி வரை லால்குடி நகர கழக செயலாளர் பொன்னி சேகர் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்க்கு வாக்குகள் சேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பில் லால்குடி நகர பூத் கமிட்டி மண்டல பொறுப்பாளர்கள் முன்னால் எம்எல்ஏ SM.பாலன், முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் அன்பில் தர்மதுரை, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ADL.டோமினிக் அமல்ராஜ், தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் GK.குணசேகர், தெற்கு ஒன்றிய இணை செயலாளர்,மணக்கால் மாரிமுத்து, நகர கழக அவைத் தலைவர் மருதமலையான்,நகர துணைச் செயலாளர் N.மோகன்,நகர மாவட்ட பிரதிநிதி.கருப்பண்ணன்(எ) தங்கமணி, நகர அம்மா பேரவை அவை தலைவர் SKM.ராஜ்குமார் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் C.ஜெயசீலன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர்T.S.பிரசன்னா, பசுமை வடிவேல், பிரபாகரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story