அதிமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்

அதிமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம்
X

அதிமுக வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி, ஒன்றிய அ.இ.அ.தி.மு.க ஓட்டுச்சாவடி முகவர்கள் கூட்டம், குமாரபாளையம் தனியார் திருமண மண்டபத்தில், நாமக்கல் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில அம்மா பேரவை இணை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு பங்கேற்றார். கூட்டத்தில் ஒன்றியத்திற்குட்பட்ட அ.தி.மு.க.வினரிடம், வரும் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது எப்படி? யார் யாருக்கு என்னென்ன பணி? என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், பள்ளிபாளையம் நகர செயலர் வெள்ளியங்கிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story