பரமத்தியில் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் ஊர்வலம்

பரமத்தியில் ஜெயலலிதா பிறந்தநாளில் அதிமுகவினர் ஊர்வலம்

பரமத்தி பேரூராட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது.பரமத்திவேலூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பரமத்தி பேரூராட்சியில் நகர செயலாளர் பைக் சுகுமார் தலைமையில் நடந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பரமத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் கலந்து கொண்டு, ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர்.

கீழ்பாலப்பட்டியில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராகா தமிழ்மணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கினார். பரமத்தி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ் புதுப்பாளையம், இரும்புபாலம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story