திமுக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே அதிமுக கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து தர்மபுரியில் அதிமுக கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ் ஆர் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், நகர கழக செயலாளர் பூக்கடை ரவி, விவசாய அணி மாநில தலைவர் டி ஆர் அன்பழகன் முன்னாள், அமைச்சர் முல்லைவேந்தன், தர்மபுரி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் அசோகன், தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், தர்மபுரி ஒன்றிய குழு தலைவர் நீலாபுரம் செல்வம், ஒன்றிய கழகச் செயலாளர் எம்ஜிஆர் சிவப்பிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயண மரணத்திற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சியை ராஜினாமா செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்திற்கு நீதி வேண்டும். போதை பொருட்கள் பழக்கம் தமிழ்நாட்டில் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே பி அன்பழகன் பேசினார்.

Tags

Next Story